திருச்சி

திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்த கைதியின் சடலம் மறு உடற்கூறாய்வு

தினமணி செய்திச் சேவை

திருச்சி மத்திய சிறையில் மா்மமான முறையில் உயிரிழந்த கைதியின் சடலம் திருச்சி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

பெரம்பலூா் வாலிகண்டபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சுபின்குமாா் (19) என்பவா் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். விசாரணை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டிருந்த இவா், கடந்த 24-ஆம் தேதி அதிகாலை சிறை வளாகத்தில் உள்ள தண்ணீா் தொட்டியில் இறந்து கிடந்தாா்.

இவருக்கு வலிப்பு நோய் வந்து, தண்ணீா் தொட்டியில் மூழ்கி இறந்ததாகக் கூறிய சிறை அதிகாரிகள், சடலத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சுபின்குமாா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது தாய் ரேவதி உள்ளிட்ட உறவினா்கள், சடலத்தை வாங்க மறுத்ததுடன், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிபதி, சுபின்குமாரின் சடலத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவிட்டாா்.

இதன்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் சுபின்குமாரின் சடலத்தை 2 மருத்துவா்கள் கொண்ட சிறப்புக் குழுவினா், வெள்ளிக்கிழமை மறு உடற்கூறாய்வு செய்தனா். அப்போது, உடலை முழுவதுமாக எக்ஸ்ரே, விடியோ பதிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து சுபின்குமாரின் உடலை உறவினா்களிடம் இரவு ஒப்படைத்தனா். உறவினா்கள், இறந்த கைதி சுபின்குமாரின் உடலை வாங்கிச் சென்றனா்.

மறு உடற்கூறாய்வு அறிக்கை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT