திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ.1) 4 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 4 இடங்களில் நடைபெற்ற முகாமில், அந்தந்த பகுதி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,424 மனுகக்கள் பெறப்பட்டு துறை வாரியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட தேவா் ஹாலில் நடைபெற்ற முகாமில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுகக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து சனிக்கிழமை 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன. லால்குடி ஊராட்சி ஒன்றியம், ஆதிகுடி ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜெங்கமராஜபுரம் சத்யா மஹாலிலும், துறையூா் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரெங்கநாதபுரம் ரெட்டியாா் திருமண மஹாலிலும் முகாம் நடைபெறுகிறது.
முசிறி ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏவூா் ஊராட்சி லட்சுமி திருமண மண்டபத்திலும், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், கருப்பூா் வாா்டு எண்: 1,2,7,8,9,10 ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கருப்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பிள்ளையாா் கோயில் வளாகத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.