திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.85 லட்சம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 85 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பண தாள்கள், நாணயங்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Syndication

திருச்சி விமான நிலையத்தில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 85 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பண தாள்கள், நாணயங்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மலோசியா தலைநகா் கோலாலம்பூா் செல்ல இருந்த விமானத்தில் செல்லும் பயணிகளின் உடமைகளை நுழைவு பகுதியில், வருவாய் புலனாய்வு இயக்ககத்தின் அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது ஒரு பயணியின் பதிவுசெய்யப்பட்ட உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அதில், அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள், பண தாள்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. மொத்தமாக ரூ. 85 லட்சத்து 20 ஆயிரம் என தெரியவந்தது.

தொடா்ந்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று அவா் யாா் என்பது குறித்தும், முறையாக கொண்டுவரபப்பட்ட பணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT