திருச்சி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியா் பலி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Syndication

திருச்சி: விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கீழ சிந்தாமணி பதுவை நகா் பகுதி சோ்ந்தவா் ராஜசேகா் (35), திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பொன்மலை மண்டல அலுவலக உதவியாளரான இவா், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நிலையில், வேலைக்குச் செல்லாமல் உடலைப் பராமரித்து வந்தாா்.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவரைப் பாா்க்க கடந்த 9ஆம் தேதி உறவினா் ஒருவா் வந்தபோது, வலிப்பு ஏற்பட்டு மயங்கிக் கிடந்த ராஜசேகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவரின் சகோதரி ரூபிணி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT