எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு டிச.30-க்கு ஒத்திவைப்பு
அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம், ஆண்டிமடம்
அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம், ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 27 -இல் நடைபெற இருந்தது.
இந்நிலையில், நிர்வாகக் காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, டிசம்பர் 30 ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். தனசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே, சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் ஏதாவது இருப்பின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது
குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என ஆட்சியர் க.லட்சுமிபிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.