அரியலூர் அருகே போலி மருத்துவர் கைது
அரியலூர் அருகே போலி மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர் பிஎஸ்சி., கணினி அறிவியல்
அரியலூர்அரியலூர் அருகே போலி மருத்துவர் கைது
அரியலூர் அருகே போலி மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர் பிஎஸ்சி., கணினி அறிவியல்
அரியலூர் அருகே போலி மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர் பிஎஸ்சி., கணினி அறிவியல் படித்துவிட்டு, அப்பகுதியில் 13 ஆண்டுகளாக மருந்தகம் (மெடிக்கல்) நடத்தி வந்தார். மேலும், இவரது மருந்தகத்துக்கு உடல் நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு அவ்வப்போது ஊசி போட்டு, மருந்து மாத்திரை கொடுத்து வந்துள்ளார்.
இதில், சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து, புகார்கள் வந்ததையடுத்து, பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜன் விசாரணை நடத்தினார். இதில், ராஜ்குமார் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸர் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.