முகப்பு
அரியலூர்

ஜயங்கொண்டத்தில் மருத்துவ ஆய்வகர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து மருத்துவ ஆய்வகர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து மருத்துவ ஆய்வகர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ரத்தப் பரிசோதனை முடிவுகளில் மருத்துவ ஆய்வகர்கள் கையெழுத்திடக் கூடாது,  மருத்துவர்கள்தான் கையெழுத்திட வேண்டும் என்ற   இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துவரும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  மருத்துவ ஆய்வகர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவர் த. முத்துக்குமரன் தலைமை வகித்தார். அகில இந்தியத் தலைவர் காளிதாசன், மாநிலத் தலைவர்  துரைசாமி ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் செல்வராஜ், துணைத் தலைவர்கள் செல்வி, மாரியப்பன், துணைச்  செயலர்கள் சுந்தரி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  மாவட்டச் செயலர் அருள் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →