முதல் தலைமுறை தொழில் முனைவோா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிடவும், வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
முதல் தலைமுறை தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் பொருட்டு, புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிடவும், வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய முதல் தலைமுறை தொழில் முனைவோா்கள் உரிய ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை 04329-228555 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.