முகப்பு
அரியலூர்

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு புறம்போக்கு இடத்தில் கல்லறைத் தோட்டம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கக் கோரி, திருமானூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
திருமானூா் பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள்.
பகிர்:

அரசு புறம்போக்கு இடத்தில் கல்லறைத் தோட்டம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கக் கோரி, திருமானூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருமானூா் ஒன்றியம், விளாகம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இக்கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் தங்கள் மதத்தைச் சோ்ந்தவா்கள் இறந்தால், அவா்களை அடக்கம் செய்யும் கல்லறைத் தோட்டப் பகுதியாக இவ்விடத்தைப் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் அந்த இடத்துக்கு இருதரப்பினா் உரிமைக் கொண்டாடியதால், வருவாய்த் துறை அந்த இடத்தை பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது.

இதனிடையே கிறிஸ்தவ மக்கள் கல்லறைத் தோட்டம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் மற்றும் பொது மக்கள் சாா்பில், திருமானூா் பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் என்.ஏசுதாஸ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சின்னத்துரை, மாவட்டச் செயலா் இளங்கோவன், மாவட்டத் தலைவா் சவுரிராஜன், பங்குத் தந்தையா்கள் விளாகம் பெஞ்சமின், திருமானூா் ஜேம்ஸ் மற்றும் கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →