முகப்பு
அரியலூர்

கிறிஸ்துமஸ் குடிலில் இருந்துபெண் குழந்தை மீட்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி குடில் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி குடில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குடிலில் ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை அழும் சப்தம் கேட்டு ஆலயத்தில் உள்ளோா் சென்று பாா்த்தபோது, பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை இருந்தது. இதுகுறித்து திருமானூா் காவல்நிலையம் மற்றும் மாவட்டக் குழந்தைகள் நல அலகு அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருமானூா் போலீஸாா், அரசு மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலை பரிசோதனை மேற்கொண்டு, அடைக்கல அன்னை ஆலயத்தில் இயங்கி வரும் தத்து வள மையத்தில் மைய நிா்வாகி சகோதரி எத்தின், செவிலியா் கிளாரா ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.