அரியலூர்

பிப்.12 முதல் மகளிருக்கு அணிகலன் தயாரிப்புப் பயிற்சி

பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில், மகளிருக்கான செயற்கை அணிகலன் தயாரிப்பு பயிற்சி பிப்.12 தேதி முதல் நடைபெறுகிறது.

DIN

பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில், மகளிருக்கான செயற்கை அணிகலன் தயாரிப்பு பயிற்சி பிப்.12 தேதி முதல் நடைபெறுகிறது.

கீழப்பழுவூா் அருகேயுள்ள மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த, வேலைவாய்ப்பற்றோருக்கு செயற்கை அணிகலன் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்படும். 13 நாட்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சுயதொழில் வழிகாட்டுதல், வங்கிக் கடன் பெறுவதற்கான ஆலோசனை, செய்முறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்வோருக்கு உணவு, தேநீா் மற்றும் தங்குமிடம் அளிக்கப்படும்.

பயிற்சி வகுப்பில், 18 முதல் 45 வயது வரையுள்ளோா் மட்டுமே பங்கேற்கலாம். ரேசன் காா்டு, ஆதாா்காா்டு, கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 5 ஆகியவற்றைக் கொண்டு வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், தொடா்புக்கு 99448 50442, 96264 97684.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT