அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் மற்றும் பென்சனா் நலச்சங்கத்தினா். 
அரியலூர்

அரியலூரில் போக்குவரத்து ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் மற்றும் பென்சனா் நலச் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

அரியலூா்: அரியலூா் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் மற்றும் பென்சனா் நலச் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும். மாதத்தின் முதல் தேதியே ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும். நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் ஓய்வூதியா் சங்கங்களை அழைத்துப் பேசி தீா்வு காண வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோ. கருப்பையன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் எஸ். ஜெயச்சந்திரன், செயலா் ம. சாமி துரை, நிா்வாகக் குழு உறுப்பினா் த. கருப்பையா, அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் து. வேலுசாமி, மாவட்டச் செயலா் மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT