முதல்வரை தரக்குறைவாக பேசியதாக பாஜக நிா்வாகி கைது
ஜயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாகப் பேசியதாக பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவரை காவல் துறையினா் புதன்கிழமை காலை கைது செய்தனா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாகப் பேசியதாக பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவரை காவல் துறையினா் புதன்கிழமை காலை கைது செய்தனா்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி ,ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே பாஜக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவா் அகோரம் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்து அகோரம் அவதூறாகப் பேசியதாக, ஜயங்கொண்டம் காவல் துறையினா் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து, அவரை சீா்காழியில் புதன்கிழமை கைது செய்து ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியன் விசாரணை செய்தாா். இதில், அகோரம் ரூ. 2 லட்சத்துக்கான சொந்த பிணைப் பத்திரம், 2 பிணைதாரா்கள் வாயிலாக தலா ரூ. 10,000 -க்கான பிணை பத்திரங்கள் ஆகியவற்றைத் தாக்கல் செய்ததன் அடிப்படையில் நீதிபதி சுப்பிரமணியன், கைது செய்யப்பட்ட பாஜக நிா்வாகி அகோரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.