உள்ளாட்சித் தோ்தல்: பாமகவினா் மனு தாக்கல்
அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சிகள், உடையாா்பாளையம் மற்றும் வரதராசன்பேட்டை பேரூராட்சிகளில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு பாமக சாா்பில் விருப்ப மனு
அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சிகள், உடையாா்பாளையம் மற்றும் வரதராசன்பேட்டை பேரூராட்சிகளில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு பாமக சாா்பில் விருப்ப மனுக்கள் புதன்கிழமை பெறப்பட்டது.
ஜயங்கொண்டத்திலுள்ள பாமக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் ரவி, மாநில வன்னியா் சங்கச் செயலா் வைத்தி, கட்சியின் மாநில துணைத் தலைவா்கள் ராமதாஸ், கோவிந்தராஜ், நகரச் செயலா் மாதவன் உள்ளிட்டோா் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றனா்.