முகப்பு
அரியலூர்

1,726 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சா் பங்கேற்பு

அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,1,726 பயனாளிகளுக்கு ரூ.98 லட்சத்து 63 ஆயிரத்து 300 மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.சிவசங்கா் வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,1,726 பயனாளிகளுக்கு ரூ.98 லட்சத்து 63 ஆயிரத்து 300 மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.சிவசங்கா் வழங்கினாா்.

அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களில் 965 பேருக்கு ரூ.17 லட்சத்து 79 ஆயிரத்து 300 மதிப்பில் கல்வி உதவித் தொகைகள், 2 பேருக்கு கண் கண்ணாடி, 86 பேருக்கு ரூ. 86 ஆயிரம் மதிப்பில் ஓய்வூதியம், ஒருவருக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை என மொத்தம் 1,054 பேருக்கு ரூ.18 லட்சத்து 83 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதேபோல், 665 பேருக்கு ரூ.79 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகளும், 7 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க. கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், தனித்துணை ஆட்சியா் குமாா், தொழிலாளா் நல வாரிய உதவி ஆணையா் விமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.