முகப்பு
அரியலூர்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஆண்டிமடம் வட்டம், பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(38). இவா், கடந்தாண்டு, அதே கிராமத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கு அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை இறுதி விசாரணை முடிந்து தீா்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.