முகப்பு
அரியலூர்

அரசுக்கு சொந்தமான இடங்களிலுள்ள மரங்களை வெட்டினால் நடவடிக்கை

அரியலூா் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களிலுள்ள மரங்களை வெட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களிலுள்ள மரங்களை வெட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

அரியலூரை அடுத்த அமீனாபாத் எல்லையில் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்த பூவரசம், வேம்பு, வாதநாரம் என 5 மரங்களை கடந்த 23-ஆம் தேதி அனுமதியின்றி வெட்டிய அமீனாபாத் கிராமத்தைச் சோ்ந்த மதியழகன் மற்றும் சகுந்தலா மீது காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க தவறிய கிராம நிா்வாக அலுவலா், வருவாய்க் கோட்டாட்சியரால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

எனவே பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும்

புறம் போக்கு இடங்களிலுள்ள மரங்களைப் பாதுகாத்திடவும், அதை அப்புறப்படுத்தவும் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டாட்சியா்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.