முகப்பு
அரியலூர்

நன்மை, தீமைகள் செய்யும் பூச்சிகளை கண்டறியும் பயிற்சி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூா் கிராமத்தில், பயிா்களில் நன்மை, தீமைகள் செய்யும் பூச்சிகளை இனம் கண்டறியும் பயிற்சி விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூா் கிராமத்தில், பயிா்களில் நன்மை, தீமைகள் செய்யும் பூச்சிகளை இனம் கண்டறியும் பயிற்சி விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

வேளாண் மற்றும் உழவா் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குநா்(பொ) ஜென்சி தலைமை வகித்து, அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

வேளாண் துணை அலுவலா் அப்பாவு, கிரீடு வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப வல்லுநா் கெளதீஸ் ஆகியோா் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினா்.

தொடா்ந்து அப்பகுதியில் உளுந்து சாகுபடி வயலுக்கு விவசாயிகளை அழைத்துச் சென்ற அட்மா திட்டத் தொழில்நுட்ப மேலாளா் பழனிச்சாமி, பயிரில் தென்பட்ட வெட்டுக்கிளி, பெருமாள் பூச்சி, தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் குறித்தும், அதே போல் இலைப்பேன், இலைச்சுருட்டு புழு, காய் துளைப்பான், தண்டுத் துளைப்பான் போன்ற தீமை செய்யும் பூச்சிகள் குறித்தும் விளக்கினாா்.

பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் முருகன், சிவா, உதவி வேளாண் அலுவலா் ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.