அரியலூர்

மக்காச்சோளத்துக்கு நிவாரணக் கணக்கெடுப்பு வேண்டும்

DIN

அரியலூா் உள்ளிட்ட மற்ற வட்டாரங்களில் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போல், செந்துறை பகுதிகளிலும் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த அக்டோபா் மாத இறுதியில் பருவ மழை தொடங்கியதால், அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், செந்துறை, குழுமூா், நமங்குணம், நக்கம்பாடி, சொக்கநாதபுரம், பெருமாண்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி பயிா்களான மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்களை விதைத்தனா்.

கடந்த சில நாள்களாக அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருவதால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்துள்ளன. பருத்தி பயிா்களும் மழைநீரில் நனைந்து வீணாகிவிட்டன.

இதுகுறித்து மேற்கண்ட பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: சராசரியாக 1 ஏக்கா் பருத்திக்கு ரூ.30 ஆயிரமும், மக்காச்சோளத்துக்கு ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தமிழக அரசு பருத்தி, மக்காச்சோளத்துக்கு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் செந்துறை பகுதியில் சேதமடைந்த பருத்தி பயிருக்கு கணக்கெடுத்து ஹெக்டேருக்கு ரூ.7,410 வழங்க உள்ளனா்.

அரியலூா் உள்ளிட்ட மற்ற வட்டாரங்களில் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போல செந்துறை பகுதிகளிலும் மக்காச்சோளத்துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT