முகப்பு
அரியலூர்

ஜயங்கொண்டத்திலிருந்து 35 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் கிளைச் சிறையிலிருந்து 35 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் கிளைச் சிறையிலிருந்து 35 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

ஜயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், விக்கிரமங்கலம், உடையாா்பாளையம், தா.பழூா் போன்ற காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சாராயம், மதுபானங்கள் விற்பனை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்கள் ஜயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகவும், கிளைச்சிறையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் கைதிகள் மூலம் தொற்றுப் பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவா்களை திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற சிறைக் கண்காணிப்பாளா் செல்வமணி மற்றும் அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோா் உத்தரவிட்டனா்.

அதன்படி ஜயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவா்களின் ஆலோசனையின்படி திருச்சி மத்திய சிறைக்கு வியாழக்கிழமை இரவு மாற்றப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.