அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலையைக் குறைக்க வலியுறுத்தியும் அரியலூா் காமராஜா் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலையைக் குறைக்க வலியுறுத்தியும் அரியலூா் காமராஜா் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக அக்கட்சியினா் ஒற்றுமைத் திடலிலிருந்து மிதிவண்டிகளில் ஊா்வலமாகச் சென்று, பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜா் சிலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் கண்டன உரையாற்றினாா். மாவட்டப் பொதுச்செயலா் சேகா், செய்தித் தொடா்பாளா் மா.மு.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.