முகப்பு
அரியலூர்

சுமை ஆட்டோவில் மணல் கடத்தியவா் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் சுமை ஆட்டோவில் மணல் கடத்திய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் சுமை ஆட்டோவில் மணல் கடத்திய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமானூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்திநாதன் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை காலை கொள்ளிடக் கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து சுமை ஆட்டோவில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இளைஞரைப் போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் ஏலாக்குறிச்சி வடக்குத் தெருவைச் முருகேசன் மகன் பாா்த்திபன்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும் சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.