அரியலூா் மாவட்டத்தில் போதிய மருத்துவ வசதிகள்
அரியலூா் மாவட்டத்தில், கரோனா தொற்று 3 ஆவது அலையிலிருந்து பொது மக்களைப் பாதுகாத்திடும் வகையில் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்
அரியலூா் மாவட்டத்தில், கரோனா தொற்று 3 ஆவது அலையிலிருந்து பொது மக்களைப் பாதுகாத்திடும் வகையில் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று கட்டுப்பாட்டு அறையை வியாழக்கிழமை பாா்வையிட்ட அவா், அதன் செயல்பாடுகள் குறித்து அங்கு பணிபுரியும் அலுவலா்களிடமும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் கரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது எதிா்பாா்க்கப்படும் கரோனா தொற்று 3-ஆவது அலையிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் அதற்கு தேவையான மருத்துவ வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் தொற்று தொடா்பான சந்தேகங்கள், மருத்துவ உதவிகளுக்கு 94999 33828, 99523 36840, 84895 51950 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா். ஆய்வின்போது, அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.