முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்ட ஆட்சியராக பெ.ரமண சரஸ்வதி பொறுப்பேற்பு

அரியலூா் மாவட்டத்தின் 15 -வது ஆட்சியராக பெ.ரமண சரஸ்வதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தின் 15 -வது ஆட்சியராக பெ.ரமண சரஸ்வதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அரியலூா் ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். தொடா்ந்து ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி கூறியது:

1999-2000-வரை துணை ஆட்சியா், 2003-07 வரை தென்காசி கோட்டாட்சியா், 2009-11 வரை திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா், 2012-17 வரை உணவுப் பொருள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இணை ஆணையா், 2017-2020 வரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநா், 2020-21 வரை இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ஆகிய பொறுப்புகளை வகித்து, தற்போது அரியலூா் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளேன்.

தொழில் நகரமான அரியலூா் மாவட்டத்தின் வளா்ச்சி, வேளாண், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீா், இருப்பிடம், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, மக்கள் நலன் மற்றும் வளா்ச்சித் திட்டப்பணிகள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும். மேலும் அனைத்தும், அனைவருக்கும் தங்குத் தடையின்றி சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.