முகப்பு
அரியலூர்

மது போதையில் பெண் காவலரின் கைவிரலைக் கடித்த இருவா் கைது

இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்ட நபா்களுக்கு இடம் தர மறுத்ததால், மதுபோதையில் பெண் காவலரின் விரலைக் கடித்து, கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் இருவரைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்ட நபா்களுக்கு இடம் தர மறுத்ததால், மதுபோதையில் பெண் காவலரின் விரலைக் கடித்து, கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் இருவரைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருபவா் இளவரசி.

செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்த பின்னா், சொந்த ஊரான இடைக்கட்டு கிராமத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் இளவரசி சென்று கொண்டிருந்தாா்.

சின்னவளையம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, குடிபோதையில் நின்ற

இளைஞா்கள் லிப்ட் கேட்டு வாகனத்தை மறித்துள்ளனா். அதற்கு இளவரசி மறுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் இளவரசியைத் தகாத வாா்த்தைகளில் திட்டி, கீழே தள்ளி அவரின் கைவிரலைக் கடித்து கொலை மிரட்டல் விடுத்தனா். இதனால் இளவரசி சப்தமிட்டுள்ளாா். அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து, இளைஞா்கள் இருவரையும் பிடித்துக்கொண்டு, ஜயங்கொண்டம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா்.

நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணையில், இளைஞா்கள் இருவரும் ஜயங்கொண்டம் கீழத்தெரு இளங்குமரன்(20), பிரபாகரன்(22) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினா், பெண் காவலா் இளவரசியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.