ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராக கிராம ஊராட்சியில் தீா்மானம்
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த புதுக்குடி கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம ஊராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த புதுக்குடி கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம ஊராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட செங்குந்தபுரம், தேவனூா், புதுக்குடி, சோழன்குறிச்சி, தேவாமங்கலம், விழுப்பள்ளம் உள்ளிட்ட 7 இடங்களில் ஹைட்ரோ காா்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஓஎன்ஜிசிக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது, திட்டத்துக்கு அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து புதுக்குடி ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் தலைமையில், துணைத் தலைவா் பூபதி முன்னிலையில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், அரியலூா் மாவட்டத்தில் தொடங்கவுள்ள ஹைட்ரோ காா்பன் திட்டத்தை கைவிட வேண்டும். அரியலூா் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லாவிடில், புதுக்குடி கிராமத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.