முகப்பு
அரியலூர்

புதிய தொழிலாளா் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளா் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளா் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் இணைய வழி கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:

தொழிலாளா்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத ஜிவிகே இஎம்ஆா்ஐ நிறுவன அதிகாரிகளின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளா் சட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எ. வெள்ளிவேல் தலைமை வகித்தாா். கோவை மண்டல தலைவா் சரவணன் மற்றும் அரியலூா் மாவட்டச் செயலா் த. திருமாறன் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் த. ராஜேந்திரன், கோவை மண்டல செயலா் ஜெகதீஷ் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.