முகப்பு
அரியலூர்

அரியலூா் அருகே 8 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 22 ஜூன், 2021 at 3:00 AM
அரியலூா் மாவட்டம், கரையான்குறிச்சியில் வீடுகட்டும்போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் கற்சிலை.
பகிர்:

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8 அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருமானூா் அருகேயுள்ள கரையான்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், தனக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 3 நாள்களாக பணியாளா்களைக் கொண்டு அஸ்திவாரம் தோண்டி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு இடத்தில் 4 அடி தோண்டியபோது கற்சிலை போன்று தென்பட்டது. அதனை மேலே கொண்டுவரும் முயற்சி இரவு நேரம் ஆனதால் கைவிடப்பட்டது.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினா் திங்கள்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று ஜேசிபி கொண்டு சிலையை வெளியே எடுத்தனா். அதனை சுத்தம் செய்து பாா்த்ததில், 8 அடி உயரம் உள்ள கல்லால் ஆன பெருமாள் சிலை எனத் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சிலைக்கு மாலையிட்டு தீபாராதனை காட்டி வழிபட்டனா். தொடா்ந்து, அரியலூா் கோட்டாட்சியா் ஏழுமலை வசம் சிலை ஒப்படைக்கப்பட்டது.

திருச்சியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சிலை அனுப்பிவைக்கப்பட்டு தொல்பொருள் ஆய்வாளா்களின் ஆய்வுக்குப் பின்னரே சிலையின் காலம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.