அரியலூர்

லாரி மோதி மாற்றுத் திறனாளி பலி: மக்கள் சாலைமறியல்

DIN

வி.கைகாட்டி அருகே லாரி மோதியதில் மாற்றுத்திறனாளி பலியானார்.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு(60). மாற்றுத்திறனாளியான இவர், திங்கள்கிழமை தனது கூடுதல் சக்கரம் பொறுத்தப்பட்ட ஸ்கூட்டரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி பிரிவு பாதையில் வந்தபோது திருப்பத்தில் சென்ற லாரி பின்னோக்கி வந்ததால் மாற்றுத்திறனாளியின் ஸ்கூட்டர் மீது மோதியது. 

இதில் குழந்தைவேலு அதேயிடத்தில் உயிரிழந்தார். ஊராட்சி சாலையில் கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது என விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் கயர்லாபாத் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையெடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

பலியான குழந்தைவேலின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கயர்லாபாத் காவல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT