முகப்பு
அரியலூர்

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு மாலைநேர உணவு வழங்கல்

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் 43 மாணவா்களுக்கு மாலை நேர உணவுகள் வழங்கும் விழா அப்பள்ளியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் 43 மாணவா்களுக்கு மாலை நேர உணவுகள் வழங்கும் விழா அப்பள்ளியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் மான்விழி கலந்து கொண்டு, மாணவா்களுக்கு மாலை நேர உணவுகளை வழங்கி பேசுகையில், பள்ளியில் வழங்கப்படும் இந்த சத்தான உணவில், சுண்டல், பட்டாணி, பாசிப்பயறு, நிலக்கடலை, எள்ளுருண்டை, குதிரைவாலி, சாமை , வரகு ஆகிய சிறுதானியங்கள் வழங்கப்படுகிறது. பொதுத் தோ்வு எழுதும் மாணவ-மாணவிகள் இதனைப் பயன்படுத்தி நன்கு தோ்ச்சி பெற வேண்டும். மே மாதம் 30 ஆம் தேதி வரை இந்த உணவு வகைகள் வழங்கப்படும் என்றாா்.

விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவா் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சின்னதுரை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அகிலா, பள்ளி மேலாண்மை வளா்ச்சிக் குழுத் தலைவா் மனோகரன், ஊராட்சி செயலா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றாா். நிறைவில், அறிவியல் ஆசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை ஆசிரியா்கள் பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.