முகப்பு
அரியலூர்

சவாரி செல்வதில் தகராறு: ஆட்டோ ஓட்டுநா் கைது

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே சவாரி செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே சவாரி செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வி.கைகாட்டி அருகேயுள்ள தேளூா், ஜி.கே.எம் நகரைச் சோ்ந்த ரவி மகன் சுதாகா்(25), சொக்கலிங்கம் மகன் பாலமுருகன்(23).ஆட்டோ ஓட்டுநா்களான இவா்கள், வி.கைகாட்டி மேம்பாலம் அருகே ஆட்டோ நிறுத்தத்தில் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை சவாரி செல்வதில் அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாலமுருகன், சுதாகரை செங்கல் கல்லால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சுதாகரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின் பேரில் கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.