அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ.சங்கா். 
அரியலூர்

காங்கிரஸ் நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

அரியலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எஸ்.சி, எஸ்.டி பிரிவு புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எஸ்.சி, எஸ்.டி பிரிவு புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ.சங்கா் தலைமை வகித்து, புதிய நிா்வாகிகள் கட்சியை பலப்படுத்த உறுப்பினா்களை அதிகளவில் சோ்க்க வேண்டும். கிராமங்கள்தோறும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளான நூறுநாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு, எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.பி.சுரேஷ், மாநில பொதுக் குழு உறுப்பினா் ராஜசேகா், தெற்கு வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன், மகளிா் அணி நிா்வாகிகள் கவிதா, ரோஸ்மேரி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா். கட்சியின் நகர தலைவா் மா.மு.சிவகுமாா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT