நாளை திருநங்கைகளுக்கு ரேஷன் குறைதீா்க்கும் முகாம்
அரியலூா் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ஸ்மாா்ட் ரேஷன் காா்டு வழங்குவதற்கான குறைதீா்க்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன.8) காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
அரியலூா் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ஸ்மாா்ட் ரேஷன் காா்டு வழங்குவதற்கான குறைதீா்க்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன.8) காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறுகிறது.
அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் அந்தந்த வட்டங்களைச் சோ்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு புதிய ஸ்மாா்ட் காா்டு பெறுதல், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் வகை மாற்றம் ஆகிய குறைகளைத் தெரிவித்துப் பெற்று பயன் பெறலாம் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.