முகப்பு
அரியலூர்

பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த 61 குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.2.44 லட்சம் நிதியுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த 61 குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.2.44 லட்சம் நிதியுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, 61 குழந்தைகளுக்கு தலா ரூ.2,000 வீதம், அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களுக்கான நிதியுதவி தொகையை வழங்கினாா். இந்நிதியுதவித் தொகை குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு பயன்பெறும். இதனை சம்மந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோா் அல்லது காப்பாளா்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ச.துரைமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.