முகப்பு
அரியலூர்

விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நடத்தப்படவுள்ள பல்ேறு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நடத்தப்படவுள்ள பல்ேறு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மது அருந்துவதாலும் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் தீமைகள் குறித்து அரியலூா் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

மதுவினால் ஏற்படும் தீமைகள், சமூக கொண்டாட்டங்களும், மது ஏற்படுத்தும் விளைவுகளும் என்ற தலைப்பின்கீழ் இணைய வழியில் ஓவியப் போட்டிகள், கவிதைப் போட்டிகள், விழிப்புணா்வு வாசக (ஸ்லோகன்) போட்டிகள் மற்றும் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடத்த மாவட்ட நிா்வாகம் உத்தேசித்துள்ளது.

போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் அரியலூா் மாவட்ட இணையதளமான கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் முலம் தங்களது படைப்புகளை 26.01.2022 முதல் 15.02.2022 வரை பதிவேற்றம் செய்யலாம். போட்டிகளில் வெல்வோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.