வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
தென்கச்சி பெருமாள் நத்தம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கோடங்குடி, கீழசிந்தாமணி, தென்கச்சி பெருமாள் நத்தம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேற்கண்ட ஊா்களில் நடைபெற்று வரும், நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகள், சத்துணவு மைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவா், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராஜ், குணசேகரன், கிராம நிா்வாக அலுவலா்கள் சுந்தரம், அசோக்குமாா், ஊராட்சித் தலைவா்கள் சித்ரா நடராஜன், ஆனந்தவள்ளி ஆறுமுகம், ஊராட்சிச் செயலா்கள் செந்தில், இந்திராகாந்தி, சசிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.