புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோவில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோவில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்வதாக வெள்ளிக்கிழமை கிடைத்த தகவலின்பேரில், ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினா், அப்பகுதி பிரதான சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, கவரப்பாளையம் அருகே வந்த சுமை ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில், ஆட்டோவினுள் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, கடத்தி வரப்பட்ட ரூ.83,850 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவற்றை கடத்தி வந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த டோலராம் (41), இவருக்கு உதவி புரிந்த விருத்தாசலத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கிரி (48) ஆகியோரை கைது செய்தனா்.