ரேஷன் கடையில் எம்.எல்.ஏ. ஆய்வு
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையில் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் கா.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையில் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் கா.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் சரியான எடையில், தரமானதாக வழங்கப்படுகிா என ஆய்வு செய்தாா். மேலும், பொருள்கள் வாங்க நியாய விலைக் கடையில் வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.