முகப்பு
அரியலூர்

தாவரப் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த ஆலோசனை

இயற்கை வேளாண்மையில், பயிரிடும் பயிா்களை நோய்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற தாவரப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

இயற்கை வேளாண்மையில், பயிரிடும் பயிா்களை நோய்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற தாவரப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்று திருச்சி விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் வே.அறிவழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுவாக பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே உழவா்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனா்.

பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவு பயன்படுத்தும் போது வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுவதோடு சுற்றுப்புறமும் மாசுபடுகிறது.

இவற்றைத் தவிா்க்க உழவா்கள் தாவரப் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

வேப்பந் தழையை உரமாகவும் பூச்சி மருந்தாகவும் பயன்படுத்தலாம்.வேப்பமுத்துக் கரைசலைப் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கை யூரியா போன்ற ரசாயன உரத்துடன் கலந்து இட்டு யூரியாவின் பயனை அதிகரிக்கலாம். வேப்பெண்ணையைத் தனியாகவும் பிற பூச்சி மருந்துகளுடன் கலந்து பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தலாம்.

வேப்பு இலையில் தழைச்சத்து 2.5 % மணிச்சத்து 0.6 % சாம்பல் சத்து 2.0 % எனும் அளவில் உள்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம். வேப்பந்தழை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.