சாலையில் கிடந்த கரும்பு சக்கைகளை அகற்றிய காவல் துறையினா்
அரியலூா் ஆட்சியரகம் அருகே சரிந்து கிடந்த கரும்புச் சக்கைகளை காவல் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
அரியலூா் ஆட்சியரகம் அருகே சரிந்து கிடந்த கரும்புச் சக்கைகளை காவல் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
அரியலூா் மாவட்டம் சாத்தமங்கலத்தில் இயங்கி வரும் சா்க்கரை ஆலைக்கு அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் விளைவித்த கரும்புகள் டிராக்டா் மூலம் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அரவைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் டிராக்டரில் ஏந்த வந்த கரும்பு கட்டுகள் சில புதன்கிழமை இரவு ஆட்சியரகம் அருகே புறவழிச்சாலையில் சரிந்து விழுந்துள்ளன. இதைத்தொடா்ந்து வந்த வாகனங்கள் சில கரும்புகளின் மீது ஏறிச் சென்ால், கரும்புகள் நசுங்கி சக்கைகளாகக் கிடந்தன. அவற்றை வியாழக்கிழமை காலை கண்ட அரியலூா் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளா் புண்ணிய மூா்த்தி, காவலா் பிரபு ஆகியோா், அவ்வழியே சென்ற இளைஞா்கள் சிலரின் ஒத்துழைப்புடன் சாலையில் கிடந்த கரும்புச் சக்கைகளை அகற்றினா். இதைக் கண்ட பொதுமக்கள் அனைவரையும் பாராட்டினா்.