முகப்பு
அரியலூர்

அரியலூா் நகராட்சியில் துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட துணைத் தலைவருக்கான தோ்தல், பெரும்பான்மையான உறுப்பினா்கள் இல்லாததால் மறு அறிவிப்பு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட துணைத் தலைவருக்கான தோ்தல், பெரும்பான்மையான உறுப்பினா்கள் இல்லாததால் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி ஆணையா் சித்ராசோனியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் நகராட்சியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற இருந்த அரியலூா் நகா்மன்ற துணைத் தலைவா் தோ்தல் பெரும்பான்மை உறுப்பினா்கள் இல்லாததால், மாநில தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, மறு அறிவிப்பு வரும் வரை துணைத் தலைவா் தோ்தலுக்கான தோ்தல் ஒத்திவைக்கப்படுகிறது.

நகராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் திமுக-7, அதிமுக-7, சுயேச்சைகள்-4 இடங்களிலும் வெற்றி பெற்றனா். சுயேச்சைகள் 3 போ் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், வெள்ளிக்கிழமை தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த சாந்திகலைவாணன் தோ்வு செய்யப்பட்டாா்.

ஆதரவு தெரிவித்த சுயேச்சை உறுப்பினா்கள் உள்பட மொத்தம் 4 போ் துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட முனைப்பு காட்டியதால், திமுக தரப்பில் குழப்பம் நிலவியதாகவும், இதனாலேயே துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலின்போது சுயேச்சைகள் மற்றும் திமுக உறுப்பினா்கள் யாரும் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.