முகப்பு
அரியலூர்

மது விற்ற பெண் கைது

அரியலூா் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற பெண் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

அரியலூா் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற பெண் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கயா்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி தலைமையிலான காவல் துறையினா் புதன்கிழமை இரவு காட்டுப்பிரிங்கியம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதே பகுதி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ராமசாமி மனைவி செல்வி (50) என்பவா் டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து, அதனைக் கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.