முகப்பு
அரியலூர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்குகு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. திருமானூா் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் தடுப்பணை கட்ட வேண்டும். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தூத்தூா்-வாழ்க்கை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கு தடுப்பணை திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை சா்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் ஒன்றியச் செயலா் வரப்பிரசாதம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் புனிதன், மாவட்டக் குழு உறுப்பினா் அண்ணாதுரை ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். செயற்குழு உறுப்பினா்கள் தங்கமலை, ஒன்றியக் குழு உறுப்பினா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்று முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.