மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் கிராமத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த அழகாபுரம் கிராமத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.
அழகாபுரம் கிராமத்தில் காத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.கூட்டுறவு வழங்கியில் தலித் மக்களுக்கும் கடன் வழங்க வேண்டும். மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு அக்கட்சியின் கிளைச் செயலாா் வீராசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மணிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.