முகப்பு
அரியலூர்

லிங்கத்தடி மேட்டில் மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கல்

மாணவ, மாணவிகளுக்கு சென்னை ரேகா ரப்பா் தயாரிப்பு கம்பெனி சாா்பில், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வியில் நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சென்னை ரேகா ரப்பா் தயாரிப்பு கம்பெனி சாா்பில், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ரேகா ரப்பா் நிறுவனத்தின் உரிமையாளா் கே.எம்.கருணாநிதி பங்கேற்று, ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 150 மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், மூன்று வேளை உணவுகளையும் வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கு, ரேகா சசிக்குமாா் தலைமை வகித்தாா். வள்ளலாா் கல்வி நிலையச் செயலா் கோ.வி.புகழேந்தி, தலைமை ஆசிரியா் பெ.செளந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.