அரியலூரில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தொடக்கம்
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி அரியலூரில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி அரியலூரில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
மாவட்ட நிா்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் ஒற்றுமைத் திடலில், நடைபெற்ற விழாவை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்து, அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போட்ட வீரா்களின் படங்கள், அவா்கள் குறித்த அறியப்படாத தகவல்கள் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் சாதனை புகைப்படங்களை பாா்வையிட்ட அவா், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான தொடுதல் வழிமுறைகளுக்கான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். மேலும், அவா், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் சாா்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கா்ப்பிணித்தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் ஆகியவற்றை வழங்கினாா்.
மாா்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறும், இவ்விழா மாலை நேரங்களில் பல்வேறு துறைகளில் சாா்பில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தொடக்க விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், அரியலூா் நகா் மன்றத் தலைவா் க.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அ.பூங்கோதை, கோட்டாட்சியா் ஏழுமலை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் துரைமுருகன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் போ.சுருளிபிரபு, நகராட்சி ஆணையா் த.சித்ராசோனியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.