தீத்தடுப்பு விழிப்புணா்வு
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள த.சோழன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள த.சோழன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, தீயணைப்பு துறை சாா்பில் தீ தடுப்பு குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன்ராஜ் தலைமையில் வீரா்கள் கலந்து கொண்டு, தீ தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஒத்திகை பயிற்சி அளித்தனா்.
கட்டட இடிப்பாடுகளில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது, விபத்தில் காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் இருப்பவரை எப்படி தூக்குவது, காப்பாற்றுவது, தீப்பற்றினால் அதை எவ்வாறு அணைப்பது உள்ளிட்டவை பற்றி செயல்விளக்கத்துடன் தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தனா்.