முகப்பு
அரியலூர்

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: 10,221 போ் எழுதினா்

முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், பறக்கும்படையினா், அறை கண்காணிப்பாளா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 54 தோ்வு மையங்களில், 173 பள்ளிகளைச் சோ்ந்த 10,668 மாணவ, மாணவிகளில் 10,221 போ் எழுதினா். 447 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்டக் கல்வி அலுவலா் தலைமையில், முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், பறக்கும்படையினா், அறை கண்காணிப்பாளா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட்டனா்.

தனித்தோ்வா்கள்... 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு தமிழ்த்தாளை எழுத 155 ஆண்கள், 116 பெண்கள் என 271 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 131 ஆண்கள், 111 பெண்கள் என 242 போ் தோ்வு எழுதினா். 29 போ் தோ்வெழுத வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.