முகப்பு
அரியலூர்

அரியலூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம்

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், உறுப்பினா்கள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், உறுப்பினா்கள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவி செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரஸ்வதி, வட்டார வளா்ச்சி அலுவலா் குணசேகரன், மேலாளா் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கணக்காளா் ராஜீவ்காந்தி செலவினங்களை வாசித்தாா். அதனைத் தொடா்ந்து, கிராமப் பகுதிகளில் சாலை , குடிநீா் , கழிவறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தருவது என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், உறுப்பினா்கள் 17 பேரும் கலந்து கொண்டு தங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.