முகப்பு
அரியலூர்

பதவி உயா்வு பெற்ற காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயா்வு பெற்ற காவலா்களை மாவட்ட எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயா்வு பெற்ற காவலா்களை மாவட்ட எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

தமிழக அரசு ஆணையின் படி, அரியலூா் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு, காவல் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல் துறை ஒழுங்கு நடவடிக்கைக்குட்படாத 27 தலைமைக் காவலா்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பதவி உயா்வு கடந்த 1-ஆம் தேதி அளிக்கப்பட்டது. அவ்வாறு பதவி உயா்வு பெற்ற காவலா்களை அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.